Tuesday 14th of May 2024 06:34:05 AM GMT

LANGUAGE - TAMIL
-
மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு மனு விசாரணை ஒத்திவைப்பு!

மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு மனு விசாரணை ஒத்திவைப்பு!


மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை அபகரிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் அத்துமீறிய அபகரிப்புத் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே எதிர்வரும் 26ஆம் திகதி வரை வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பிரதிவாதிகள் சார்பில் ஒருவர் மாத்திரமே இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நிலையிலேயே, வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் (ஜனா), த.கலையரசன் ஆகியோரும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE